Tuesday, June 18, 2013

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி:

முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்டளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.

தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை 48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து பூஜித்து வரவும்.

இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது, உங்கள் துன்பத்தையும் துயரத்தையும் போக்குவதற்கு இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.

இந்த ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

தமிழாக்கம்

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்.

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.