Thursday, August 29, 2013

பூத்திருக்கும் விழிஎடுத்து - Poothirukkum vizhi

MOVIE : Kalyaana Mandapam [1965]

PRODUCERS : Dhanalakshmi Theatres
PLAYBACK SINGERS : PB.Srinivas, P.Suseela
CAST : Ravichandran, MS.Malathi
LYRICS : Thellur M.Tharmarasan
MUSIC : R.Parthasarathy
DIRECTOR : Ma.Ra.
Other Actors : CL.Anandan, KR.Vijaya, RS.Manohar, Nagesh

பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா

மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
மாதுளையை பிளந்தெடுத்தே
காதலை அளந்து தரலாமா

தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா 
செம்பவள நாவினிலே
தேனாய் குளிக்கவா
தேமதுர செவியிலே
மணியாய் ஒலிக்கவா

பனிக்குளிரின் மொழியினிலே
படையெடுத்தாய் தளிர்க்கொடியே
அமுத இசை மயக்குதடி
அருவியில் இன்பம் சுரக்குதடி

ஆசைமுகம் அருகிருந்தால்
ஆவல் தணியுமா
அன்பு வெள்ளம் கரை கடந்தால்
இன்பம் குறையுமா

ஆசைமுகம் அருகிருந்தால்
ஆவல் தணியுமா

Monday, August 26, 2013

சிகரம் இணையத் தமிழ் வானொலி
24மணி நேரமும் இன்னிசை மழை
SIGARAM FM    
Provo   Utah   USA

http://www.sigaramfm.com/
http://174.36.206.197:8156

INDIA RADIO india-radio.co.nr

Wednesday, August 21, 2013

மாதுளை சாப்பிட்டால் நீங்க ஆரோக்கியசாலி தான்!!!

மாதுளை சாப்பிட்டால் நீங்க ஆரோக்கியசாலி தான்!!!




இன்றைய சூழலில் உலகமே சிறு கிராமமாக மாறிவிட்டது. வெவ்வேறு நாடுகளில் வாழ்வோரும் இணையமேடையில் ஒன்றாகக் கூடித் தங்கள் கருத்துக்களை மொழிப்பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள். அறிவுக்கு மொழி தடையல்ல என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது.கணினியும் இணையமும் அடைந்துவரும் வளர்ச்சியை உற்றுநோக்கும்போது
,எதிர்காலத்தில் உலகத்தின் ஒரே மொழி கணினியின் குறியீட்டு மொழியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் கணினியின் மொழியைத் தமிழர்கள் கற்றுக்கொள்வதும் தம்மொழியைக் கணினிக்குப் புரியவைப்பதும் தமிழர்களின் அடிப்படைக் கடமையாக அமைகிறது. இன்றைய வழக்கில் உள்ள மொழிமாற்றுத் தொழில்நுட்பங்கள் வழி எந்த மொழியை வேண்டுமானாலும் எந்தமொழியிலும் மாற்றிப் படிக்கமுடியும். அதனால் அவரவர் தாய்மொழியில் தம் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அந்த அடிப்படையில் இன்று நாம் பயன்படுத்தும் கணினிகள் எந்த அளவுக்குத் தமிழ்பேசுகின்றன என்பதை எடுத்துரைத்து நாம் செய்யவேண்டிய கடமைகளைக் கோடிட்டுக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது,
இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள்
ஆங்கிலம்சீனம்சுபானியம்சப்பானியம்போர்த்துகீசியம்செர்மன்அராபிக்பிரெஞ்சு,இரசியன்கொரியன் ஆகிய மொழிகள் இன்றைய இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதல் பத்து மொழிகளாக உள்ளன. இந்தப் பட்டியல் நமக்கொரு உண்மையைப் புலப்படுத்திச் செல்கிறது. சிவப்பு என்பது அழகல்ல நிறம்ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்ற பொன்மொழியே நினைவுக்கு வருகிறது. கணினியின் மொழி ஆங்கிலம் மட்டுமல்லகணினியைப் புரிந்துகொண்ட மொழிகளையெல்லாம் கணினியும் புரிந்துகொள்ளும்’ என்பது நம் புரிதலாக இருத்தல்வேண்டும். கணினிக்கு 01 என்பதே தாய்மொழி என்பதால் எந்தமொழியையும் சொல்லும்விதத்தில் சொன்னால் கணினி புரிந்துகொள்ளும். நிரல்மொழிகளை அதற்குப்புரியும் விதத்தில் கட்டளையாகக்கொடுத்தால் நம் தமிழ்மொழியைக்கூடக் கணினி அழகாகப் பேசும் என்பது ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டிய நுட்பமாகும்.

இயங்குதளங்களும் தமிழும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ்எழுத்துருக்களைப் பயன்படுத்திவந்த காலத்தில் ஒருங்குறி என்னும் எழுத்துரு அதற்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளிவைப்பதாக அமைந்தது. இருந்தாலும் பல்வேறு இயங்குதளங்கள் தமிழ் எழுத்துருக்களை ஏற்காத நிலையே நீடித்தது. இப்போது விண்டோசுலினெக்சு எனப் பல்வேறு இயங்குதளங்களும் தமிழ் எழுத்துருக்களை ஏற்றுக்கொள்கின்றன. கணினியின் இயங்குதளம் குறித்த அடிப்படை அறிவை இளம் தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வழிவகைசெய்யவேண்டும்.

தமிழ்த் தட்டச்சுப்பலகை
தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம்அழகி போன்ற மென்பொருள்களின் வழி தட்டச்சுசெய்துகொண்டாலும். தட்டச்சுப்பலகைகளெல்லாம் இன்னும் ஆங்கில எழுத்துமுறையில் தான் உள்ளன.  தமிழ்த்தட்டச்சுப்பலகை வடிவமைக்கப்பட்டு தமிழர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். இன்று தமிழில் தட்டச்சு செய்வோர் தமிழ்த் தட்டச்சுமுறையிலோதமிங்கில முறையிலோ,ஆங்கிலமுறையிலோ தம் கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதற்கேற்ப தமிழ்த்தட்டச்சுப் பலகைகள் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மென்பொருள்கள்
இயங்குதளம்உலவிவேர்டு உள்ளிட்ட ஆபீசு தொகுப்புகள்அடாப் தொகுப்புகள் என நாம் பயன்படுத்தும் பல்வேறு மென்பொருள்களும் இப்போது தமிழ்மொழியை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் அதன் கட்டளைகள் யாவும் ஆங்கிலமொழியில் தான் உள்ளன. அதற்குப் பதில் தமிழ்மொழியே கட்டளை மொழியாக இருந்தால் தமிழின் பரவல் இன்னும் அதிகரிக்கும்.

தமிழ் இணையதளங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் இணையதளங்களைக் காண்பதே அரிதாக இருந்தது. அவையும் தனித்தனி எழுத்துருக்களைப் பயன்படுத்திவந்தன. இப்போது நிறைய தமிழ் இணையதளங்களைக் காணமுடிகிறது. எல்லாம் ஒருங்குறி எழுத்துருமுறையைப் பயன்படுத்துவதால் அவ்வளவு எழுத்துருச்சிக்கல்கள் ஏற்படுவதில்லை. அரசு இணையதளங்கள்பல்கலைக்கழகங்கள் தொடங்கிநாளிதழ்கள்வாரஇதழ்கள்,எழுத்தாளர்கள் என தமிழர்களால் உருவாக்கப்படும் இணையப்பக்கங்கள் யாவும் முழுக்கமுழுக்க தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுவருகின்றன. தமிழிணையங்களில் தமிழின் செல்வாக்கை எடுத்தியம்ப தமிழ் இணையப்பல்கலைக்கழகம் (www.tamilvu.org)விக்கிப்பீடியா    (www.ta.wikipedia.org ) என்னும் இரு இணையதளங்களைச் சான்றாகத் தருகிறேன்.

வலைப்பதிவுகள்
பிளாக்கர்வேர்டுபிரசு உள்ளிட்ட இலவச வலைப்பதிவுகள் வழி இணையதளங்களுக்குப் போட்டியாக நிறைய வலைப்பதிவர்கள் உருவாகியிருக்கிறார்கள.பல்வேறு துறைசார்ந்த இவர்கள் தம் கருத்துக்களை முடிந்தவரை தமிழிலேயே வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் எவ்விதமான தடையுமின்றித் தம் கருத்துக்களைத் தமிழில் வெளிப்படுத்துவதால் திரைபடத்துறையினர்,தொடங்கி அரசியல்வாதிகள் வரை வலைப்பதிவுகளைத் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமூகத் தளங்கள்
                இன்றைய மக்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் முகநூல்(www.facebook.com )   டுவைட்டர்(www.twitter.com கூகுள்பிளசு(google+)என பல்வேறு சமூகத்தளங்களிலும் தமிழ்ப்பற்றாளர்களால் இப்போது தமிழ் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. அதனால் அந்த தளங்களும் முடிந்தவரை தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தருகின்றன. இத்தளங்களைப் பயன்படுத்தும் தமிழர்களில் பலரும் ஆங்கிலமொழியிலேயே தம் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தமிழர்கள் யாவரும் தம் கருத்துக்களைத் தமிழிலேயே வெளியிட்டால் உலகமே திரும்பிப்பார்க்கக்கூடிய மாபெரும் மொழியாக தமிழ்மொழி திகழும் என்பதைத் தமிழர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

எழுத்துரு மாற்றிகள்
                இத்தனை காலமாக பல்வேறு தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்ததால் அந்தத் தகவல்களைத் தமிழ் ஒருங்குறி முறைக்கு மாற்றிக்கொள்வதற்காகபொங்குதமிழ் உள்ளிட்ட எழுத்துருமாற்றிகள் பெரிதும் பயன்படுவனவாக விளங்குகின்றன.

மொழி மாற்றிகள்
                தமிழ் எழுத்துருக்களை பிற மொழிகளுக்கு மாற்றவும்பிற மொழியிலுள்ள எழுத்துருக்களைத் தமிழ் எழுத்துருக்களாக மாற்றவும் கூகுள் மொழிமாற்றி உள்ளிட்ட நிறைய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. என்றாலும் தொழில்நுட்பமறிந்த தமிழர்களுக்கு அந்த அளவுக்கு இலக்கணம் தெரியவில்லை என்பதால் இன்னும் இவ்வாறு மொழிமாற்றும் போது நிறைய இலக்கணப் பிழைகள் ஏற்படுகின்றன. அதனால் தமிழ் இலக்கணமறிந்தவர்கள் தொழில்நுட்பமும் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் இந்த மொழிமாற்றித் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழி தனிச்சிறப்புடையதாக அமையும்.

அகராதிகள்
                தமிழ்ச்சொற்களின் பொருள்களை அறிந்துகொள்ள இன்று நிறைய இணைய அகராதிகள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. அண்ணா பல்கலை அகராதிகூகுள் அகராதி,பாப்ரிசிசு அகராதிகதிர்வேலு அகராதிமெக்ஆல்பின் அகராதிதமிழ்டிக் டாட்காம்,தமிழ்லெக்சிகன் ஆகியன குறிப்பிடத்தக்க அகராதிகளாகும். சான்றாக விக்சனரி  என்னும் இணையஅகராதி 2,58,606 சொற்களைக் கொண்டு விளங்குகிறது.

சொல் திருத்திகள்  
                ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சுசெய்யும்போது எழுத்துக்கூட்டலைச் சரிபார்த்துப் பரிந்துரைசெய்யும் மேம்பட்ட சொல்திருத்திகள் ஆங்கிலமொழியில் நிறைய உண்டு. அதுபோல இப்போது தமிழ்ச் சொல்திருத்திகளையும் உருவாக்கிவருகின்றனர். அவையெல்லாம் சோதனைமுயற்சியிலேயே இருக்கின்றன. இந்தசொல் திருத்திகள் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது தமிழின் பரவல் அதிகரிக்கும்.
மின்னூல்கள்
                நிறைய தமிழ்மின்னூல்கள் இணையவெளியில் கிடைக்கின்றன. இபுக் ரீடர்போன்ற தனித்துவமான கண்டுபிடிப்புகளும் சாதாரணமான அலைபேசிகளும் கூட இப்போதெல்லாம் மின்னூல்களை வாசிக்கப்பயன்படுகின்றன. அதனால் எதிர்காலத்தில் இணையவெளியில் நிறைய தமிழ்மின்னூலகங்கள் உருவாகலாம். அதன்வழியே தமிழ்நூல்கள் எல்லாம் கிடைக்க வழிவகைஏற்படலாம். அதனால் நாமும் நம்மாலானவரை நம் துறைசார்ந்த தமிழ்நூல்களை மின்னூலாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றாக சில மின்னூலகங்கள் (http://www.noolaham.org/,  http://www.chennailibrary.com/ http://www.projectmadurai.org/ )

ஒலிப் புத்தகங்கள்
                இப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துப் படிப்பதற்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை. அதனால் (ஆடியோ புக்) ஒலிப்புத்தகங்கள் நிறையவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. தமிழ் இலக்கியங்கள் யாவும் எம்பி3 வடிவில் பதிவு செய்யப்பட்டு குறுவட்டுகளாகவோஇணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடனோ கிடைக்கின்றன. இதுவரை சங்கஇலக்கியங்கள்தொல்காப்பியம்திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள் கூட ஒலிப்புத்தகங்களாகக் கிடைக்கின்றன. சான்றாக http://tamilaudiobook.blogspot.in/ ,http://www.itsdiff.com/ http://www.tamilvu.org/library/libindex.htm  ஆகிய இணையதளங்களைக் குறிப்பிடலாம்.
தமிழ்க் காணொளிகள்
                யுடியுப்  உள்ளிட்ட காணொளித்தளங்களில் இப்போதெல்லாம் அதிகமாக தமிழ்ப்பதிவுகளைக் காணமுடிகிறது. தமிழ்ச்சொற்பொழிவுகளையும்இலக்கிய மேடைகளையும் இப்போதெல்லாம் காணொளிகளாகப் பதிவேற்றும் பணியையும் தமிழர்கள் செய்துவருகிறார்கள்.

அலைபேசிகளில் தமிழ்
பெரிய பெரிய கணினி நிறுவனங்களும் இப்போதெல்லாம் கணினி தயாரிப்புகளை ஓரம்கட்டிவைத்துவிட்டு டேப்ளட் பிசிநோட்புக் பிசிசுமார்ட் போன்’ உள்ளிட்ட அலைபேசி தயாரிப்புகளில் இறங்கிவிட்டன. எதிர்காலத்தில் இவைதான் இணையவசதியோடு தகவல்தொடர்புக்கு அதிகமாகப் பயன்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. ஒருகாலத்தில் அலைபேசிகளில் தமிழ்க்குறுந்தகவல் அனுப்புவதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று அலைபேசிகளில் தமிழ்ப்புத்தகங்களைப் படிக்கமுடிகிறது. தமிழ்வழி இணையதளங்களைப் பார்க்கமுடிகிறது.


எதிர்காலத்தில் தமிழ்
                வானில் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை அதன் ஓட்டுநர்,நாம்தான் உயரத்துக்கு வந்துவிட்டோமே பறந்ததுபோதும் என்று ஓட்டுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்அதுபோலத்தான் இன்று நம் தமிழின் நிலையும் இருக்கிறது. நாம் இன்று இணையத்தில் அடைந்த வளர்ச்சியே போதும் என்று இருந்தால் நாம் எதிர்காலத்தில் அடையாளம் இழந்தவர்களாகப் போய்விடுவோம். இன்றைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்புடையதாக நம் தமிழ் மொழியிருக்கிறது என்று நாம் பெருமிதம்கொள்ளும் நிலையில் இவற்றில் பெரும்பகுதி நாம்கடன்பெறும் தொழில்நுட்பங்களாகவே இருக்கிறது என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
கலைச்சொல்லாக்கம்
                எல்லா அறிவியல்துறைகளையும் தமிழ்மொழியிலேயே படிக்கவேண்டும். அப்போதுதான் புரிதலும்கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கிவருகிறோம். பிறநாட்டார் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழில் பெயரிடுவதில் காட்டும் ஆர்வத்தை நாம் கலைச்சொல் உருவாக்கத்தில் காட்டவேண்டும். கணினித்துறையில் அதிகமான கலைச்சொற்களை உருவாக்கி மேற்கண்ட எல்லாத் தொழில்நுட்பங்களையும் தமிழிலேயே வடிவமைக்கும் அளவுக்கு நாம் இன்னும் வளரவேண்டும்.

தமிழ் எழுத்துக்களை ஒலியாகக் கேட்க
                இதுவரை நாம் பார்த்த தொழில்நுட்பக்கூறுகள் யாவும் கணினியில் தமிழ் எந்த அளவுக்கு ஏற்புடைத்தாகவுள்ளது என்றும்தமிழ் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்தியம்புவதாக அமைந்தது. இந்த வளர்ச்சியின் மணிமுடியாக ஒரு தொழில்நுட்பம் இப்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/  என்ற இணையதளத்திற்குச் சென்று தமிழ் ஒருங்குறி முறையிலான எழுத்துக்களை நகல் (காப்பி) எடுத்து ஒட்டினால் எம்பி3 என்னும் வேவ் ஒலிக்கோப்பாக அந்த எழுத்துக்களைப் பதிவிறக்கிக் கேட்டுமகிழமுடியும். இந்தநுட்பம் ஆங்கிலமொழியில் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் இப்போது தமிழுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது பெருமிதம்கொள்ளத்தக்கதாக அமைகிறது.

தமிழர்களின் சிந்தனைக்காக.
நம் தமிழ்மொழி தொன்மையானதுதொடர்ச்சியான இலக்கியஇலக்கண மரபுடையது என்றாலும் அறிவியல்துறையில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறது. சான்றாக, 134கோடி மக்கள்தொகை கொண்ட சீனர்களில் 38 கோடிபேர் இணையத்தைப் பயன்;படுத்துகின்றனர். 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 6 கோடிப் பேர்தான் உள்ளனர். அதனால் நம் வீட்டில் இருக்கவேண்டியது தொலைக்காட்சியாகணினியாஎன்பதை ஒவ்வொரு தமிழர்களும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
எதிர்காலத்தில் ஒரு  தொழிற்சாலையில் இருவர் மட்டும்தான் வேலைபார்ப்பார்கள். ஒருவர் காவல்காரர்இன்னொன்று நாய். காவலருக்கு வேலை அங்கு இருக்கும் கணினிகளெல்லாம் ஒழுங்காக வேலைசெய்கின்றனவாஎன்று பார்ப்பது. அவர் உள்ளே சென்று எந்தக் கணினியையும் தொடாமல் இருக்கிறாராஎன்று பார்ப்பது நாயின் வேலை என்றொரு கணிப்பு உள்ளது. வள்ளுவர் இன்று இருந்திருந்தால்..             
                             ‘சுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்
            உழந்தும் கணினியே தலை
                            
                             ‘கணினி கற்றுவாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
            தொழுது அவர்பின்செல் பவர்
என்று பாடியிருப்பார்.

முடிவுரை
·         இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள் வரிசையில் இப்போது தமிழ் இல்லை என்றாலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள மொழியாகத் தமிழ் விளங்குகிறது.
·         இப்போதுள்ள இயங்குதளங்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் இயங்குதளங்களுக்கான துறையில் நாம் இன்னும் குழந்தை நிலையில்தான் இருக்கிறோம்.
·         தமிழ்த்தட்டச்சுப் பலகைகள் இதுவரை இல்லை என்பதால் அதனைத் தயாரித்துப் பரவலாக்கவேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம்.
·         முழுக்க முழுக்க தமிழ்க்கட்டளைகளைக் கொண்ட உலவிஆபிசு தொகுப்பு,அடாப்தொகுப்பு ஆகியன தமிழின் பரவலை அதிகரிக்கும். அவற்றை உருவாக்குவது குறித்து கணினிபடித்த தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.
·         தமிழ் இணையதளங்களைப் பார்க்கும்போது அவை ஆங்கில இணையதளங்களுக்கு இணையாக இருக்கின்றன. இது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.
·         தமிழ் வலைப்பதிவுகள் இணையதளங்களுக்கு இணையான மிகப்பெரிய ஆற்றலாக உருவெடுத்துள்ளன.
·         முகநூல்டுவைட்டர்கூகுள் பிளசுஆர்குட் உள்ளிட்ட சமூகத்தளங்களில் தமிழர்களின் பங்களிப்பு வரவேற்புக்குரியதாக உள்ளது. தமிழர்கள் எல்லோரும் தம் கருத்துக்களை தமிழ்மொழியிலேயே வெளியிட்டால் உலகநாடுகளெல்லாம் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழின் ஆதிக்கம் இருக்கும்.
·         எழுத்துருமாற்றிகளும்மொழிமாற்றிகளும்அகராதிகளும் இணையப்பரப்பில் தமிழின் ஆளுமைகளை வெளிப்படுத்துவனவாக விளங்குகின்றன.
·         தமிழ்ச்சொல் திருத்திகளைத் தமிழுலகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.
·         இணையத்தில் கிடைக்கும் தமிழ் மின்னூல்கள் தமிழரிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
·         தமிழ் ஒலிப்புத்தகங்களும்தமிழ்க்காணொளிகளும் தமிழின் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சிக்குச் சான்றாகின்றன.
·         அலைபேசிகள்டேப்ளட் பிசிசுமார்ட் பிசி ஆகிய நவீன தொழில்நுட்பக் கருவிகளுக்கு ஏற்ப தமிழ் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வருகிறது.
·         நாள்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழர்களுக்கு உள்ளது.
·         நிகழ்கால ஆண்ட்ராய்டுஈதர் நெட்மேகக்கணினிசிக்த் சென்சு தொழில்நுட்பங்களை உள்வாங்கி எதிர்காலத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தமிழ்மொழியைத் தகவமைக்கவேண்டிய பணி தமிழர்களுக்கு உள்ளது.
·         இன்றைய கணினிகள் தமிழ்மொழியைப் புரிந்துகொள்வதோடுதமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து அவற்றை ஒலிக்கோப்புகளாகப் பதிவிறக்கிக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன. இது சீனமொழியோடு ஒப்பிடும்போது குறைந்தபட்ச வளர்ச்சிதான். அதனால் காலத்தின்தேவையை உணர்ந்து தமிழர்கள் யாவரும் கணினியைத் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில்,

கணினிகள்  தமிழ்பேசும் நிலையில்தான் இருக்கின்றன.
ஆனால் பல தமிழர்களுக்குத்தான் கணினியிடம் 
தமிழ்பேசத் தெரியவில்லை.
தான் அறிவாளி என எண்ணிக்கொள்ளும்போது ஒரு அறிவாளி முட்டாளாகிறான்
தான் முட்டாள் என்பதை உணரும்போது முட்டாள் அறிவாளியாகிறான்.
கணினியில்இணையத்தில் நாம் அறிவாளியாமுட்டாளா?
என்று தன்மதிப்பீடு செய்துகொள்வோம்..

நம்மால் முடிந்தவரை கணினியிலும்இணையத்தில் நம் கருத்துக்களை வெளியிடுவோம்.