Friday, January 17, 2014

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்
**********************************************************************

வியாபாரம், தொழில் சிறக்க, எதிர் எண்ண அலைகளை தடுக்கக் கூடிய அனுபவமிக்க மந்திரம்.


Wednesday, January 15, 2014

ஆண்களின் விந்தணுக்களையும் அதன் வீரியத்தையும்
அதிகரிக்க உதவும் அட்டகாசமான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகை ய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு ப்பழக்க வழக்கங்கள் மற்று ம் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
மேலும் கருவுறுதல் பிரச்ச னை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுத்தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான
உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்த மாதிரி யான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத் துவரிடம் சென்று அதற்கா ன தீர்வை சரி செய்ய முய ல்வார்கள். ஆனால் அவ் வாறுசென்று என்னதான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப் பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்தபிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
குழந்தை பெற நினைப்பவர் கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பி ற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுக ளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்த ணுவின் அள வை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!
1. பூண்டு
பூண்டு இந்த உணவு ஆண் ம ற்றும் பெண்களுக்கு மிகவும் சி றந்தது. ஏனெனில் இதில் வைட் டமின் பி6 இருப்பதால், இது இரு பாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழி வகுக்கும்.
2. மாதுளை
மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந் தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.
3. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விந்தணுவின் அள வையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமி ன் ஏ, வைட்ட மின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அது மட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொரு ள் இருப்பதா ல், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கா ன உணர்ச்சியை அதிகரி க்கும்.
4.பசலைக் கீரை
பசலைக் கீரையில் ஃபோ லிக் ஆசிட் அதிகம் இருக் கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந்தணு வில் உள்ள டி. என்.ஏ -வைப் பாதுகாக் கிறது. அது மட்டுமின் றி, இந்த உணவில் வை ட்டமின் சி மற்றும் இரு ம்புச்சத்து உள்ளது. என வேதான், பசலைக் கீரை ஆண்களின் ஆண் மைத் தன்மை யை அதிகரிக்க உதவுகிறது.
5. மிளகாய்
மிளகாய் என்றதும் நம்பமுடி யாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதி கரிக்க உதவும் உணவுப்பொ ருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தா ல், இவை எண்டோர்பின் கள் என்னும் ஒரு வித சந் தோஷம் உணர்வைத் தூ ண்டக்கூடிய ஹார் மோன் களை விடுவிக்கும் . இத னால் உடல்தளர்வடைந் து விடும். மேலும் இ தில் வைட்டமின் சி, பி, ஏ மற்று ம் ஈ சத் துக்களும் உள்ளன.
6. தக்காளி
இது பொதுவாக சமைய லில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணு வை ஆரோக்கியமாக்க வும், அதிகரிக்கசெய்யு ம் கரோ ட்டினாய்டு லைகோபைன் உள்ள து. அதிலும இத னை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனி ல் தினமும் ஒரு டம்ளர் தக் காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாக வே  விந்தணுவின் அளவா னது அதிகரிக்கும்.
7. தர்பூசணி
தர்பூசணிப்பழத்தில்லைசோ பைன் மற்றும் நீர்ச்சத்து அதிக ம்உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அ திகரிப்பதோடு, ஆரோக்கி யமாகவும் இருக் கும்.
8. வைட்டமின் சி உணவுக ள்
வைட்டமின்சி அதிகம் உள்ள உணவுகளைசாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்த ணுவின் அளவை அதிகரி க்கலாம். அதற்கு வைட்ட மின் சி நிறைந்து ள்ள உண வுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கு ம்.
9. ஆப்பிள்
ஆப்பிள் பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன் மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட் டால், விந்தணுவின் எண் ணிக்கையை அதிகரிக்க லாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டா ல், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடை க்கும்.
10. முந்திரி
முந்திரி, ஸ்நாக்ஸில்சிறந்த உண வுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் ப ருப்பு மிகவும் சுவையுடன் இருக் கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க்சத்து, கருவுறுதல் தன் மையை அதிகரிக் கும்.
என்ன விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவு ககளை உண்டு பார்த்திடலாமா.

Tuesday, January 14, 2014

நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்க!!

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

Sunday, January 12, 2014

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள்
********************************************************************************
சில மலரும் இனைவுகள்
*****************************

1. Announcer K.Jeykrishna and Calista lucas ,Jeyanthi jeyshankar,Jyothi parmar 



2. காவலூர் ராசதுரை (பி. ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். 
சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்.'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். 
விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களை அரங்கேற்றியவர்.
தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கையில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 
இந்தச் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு தர்மயுக் என்ற இதழில் வெளியாகியது.
சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். 

தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். 
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. 
வீடு யாருக்கு? என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது.பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். 
யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.
யுனிசெப் நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். 

இவர் பின்னாளில் சொந்தமாக வசீகரா என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் கொழும்பில் நிறுவினார். 
புலம் பெயர்ந்து தற்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். 
இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைத் தொகுதி, 1961)
வீடு யாருக்கு? (புதினம், 1972)
ஒரு வகை உறவு (சிறுகதைத் தொகுதி, 1976) 


விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம் 




3. கோகிலவர்த்தனி சிவராஜா (சுப்பிரமணியம்) இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்களில் ஒருவர். 
ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் நடித்ததோடு சிறந்த மெல்லிசைப்பாடல்களையும் பாடியவர்.

பாடிய மெல்லிசைப்பாடல்கள்

கங்கையாளே..கங்கையாளே - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள் - கவிஞர் முருகையன்
வானத்தை வந்து வந்து பாராய் சகோதரி சுபத்திரா சந்திரமோகனுடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள் - பசுபதி
நெஞ்சினில் ஊறும் நினைவுகள் யாவும் - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. 
பாடல் வரிகள்- திருமலை கே.கே.மதிவதனன் 



4. 
சானா என்று அழைக்கப்படும் சண்முகநாதன் (சனவரி 11, 1911 - 1979) இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 
1950களில் பிபிசியில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. 
நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.
சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். 
கொழும்பில் பிறந்தவர். 
தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.
சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. 
ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். 
ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். 
அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். 
சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். 
"சிலோன் சண்முகநாதன்" என்ற பெயரிலேயே நடித்திருந்தார். 
தேவகி என்ற திரைப்படத்தில் நட்டுவனார் வேடத்தில் நடித்தார்.
 



5. SLBC SUPER GRADE TAMIL ANNOUNCER,PRODUCER SANOOS MOHAMED FEROZ 


Wednesday, January 8, 2014

ஆயுர் வேத முறைபடி அழகுபடுத்துங்கள்

********************************************************************************************* 

பண்டைய இந்திய விஞ்ஞானத்தின் மருத்துவம் தான் ஆயுர்வேதம். 
பல வகையான செடிகள், மூலிகைகள் மற்றும் மசாலாக்களை கலந்து ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. 
ஆயுர்வேத மருந்துகள் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி சிறப்பாக செயல்படும். இதில் எண்ணிலடங்கா பயன்கள் இருப்பதால் மேற்கத்திய நாடுகளிலும் கூட இந்த மருந்துகள் புகழ் பெற்றுக் கொண்டு வருகிறது. 
நம் உடம்பில் உள்ள உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் ஆயுர்வேதம் பார்த்துக் கொள்கிறது. 

அதே போல் சரும வியாதிகளை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தில் சில மருந்து வகைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகள் உள்ளது. 
சருமம் என்பது நம் உடலில் உள்ள மென்மையான பகுதியாகும். 
வானிலை மாற்றங்கள், மாசு மற்றும் தொற்றுக்கள் போன்றவற்றால் உங்கள் சரும திசுக்கள் சுலபமாக பாதிப்படையும். குளிர் காலத்தின் போது உங்கள் சருமத்தை பாதுகாத்திட சில பயனுள்ள ஆயுர்வேத டிப்ஸ் உள்ளது.

  
வறண்டு போய் இருக்கும் குளிர் காலத்தில் உங்கள் சருமம் வறண்டு சொரசொரப்பாக மாறி விடும்.
குளிர் காலத்தில் உங்கள் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பாக விளங்குகிறது ஆயுர்வேத மருந்துகள். 
ஏற்கனவே குளிர் காலம் தொடங்கி விட்ட நிலையில், 
நம்மில் பல் பேருக்கு வறண்ட பாதம், வெடிப்பு விழுந்த உதடுகள் மற்றும் சொரசொரப்பான சருமம் உண்டாகி இருக்கும். குளிர் காலத்திலும் உங்கள் சருமம் பொலிவடைந்து ஜொலித்திட பல ஆயுர்வேத டிப்ஸ்கள் உள்ளது. 
மேலும் உங்கள் சருமம் நற்பதத்துடன் மென்மையாக இருக்க ஆயுர்வேதம் எப்படி உதவுகிறது என்பதை பற்றியும் பார்க்கலாமா?


மசாஜ்
~~~~~~

வறண்ட சொரசொரப்புள்ள சருமத்திற்கு தீர்வாக சூடான எண்ணெய் மசாஜ் கொடுக்க சொல்லி வலியுறுத்துகிறது ஆயுர்வேதம். 
பிராமி மற்றும் வேம்பு போன்ற ஆயுர்வேத பொருட்களை கலந்த சூடான எண்ணெய்யை பயன்படுத்துங்கள். 
எண்ணெய் மசாஜ் உங்கள் சருமத்திற்கு பொலிவூட்டும். 
மேலும் அது உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கும். சீரான முறையில் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது குளிர் காலத்தில் சருமத்திற்கு மிகவும் நல்லது. மசாஜ் செய்து கொள்ள சந்தையில் பல ஆயுர்வேத எண்ணெய்கள் கிடைக்கின்றன.


ஃபேஸ் பேக்
~~~~~~~~~~~

குளிர் காலத்தில் ஃபேஸ் பேக் எனப்படும் மூலிகளை கலந்த முகப்பூச்சுக்களை பயன்படுத்தினால் உங்கள் சருமம் மீண்டும் ஈரப்பதத்தை பெறும். பன்னீர், நெல்லிக்காய், கற்றாழை, மஞ்சள் மற்றும் இதர இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். 
இவைகளை பால் அல்லது க்ரீமுடன் கலந்து பயன்படுத்தலாம். 
கற்றாழையை பயன்படுத்தி செய்யப்படும் ஜெல்லை ஒரு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். 
இந்த ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். 
பாலில் பன்னீரை கலந்து தினமும் பயன்படுத்துவது மற்றொரு வழியாகும். இவைகளை சீரான முறையில் பயன்படுத்தினால் உங்கள் சருமம் புத்துணர்வு பெற்று ஈரப்பதத்துடன் இருக்கும்.


ஆரோக்கியமாக உண்ணுங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளிர் காலத்தின் போது நன்றாக சாப்பிட வேண்டியது அவசியம். உங்கள் உணவுகளில் நெல்லிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, ட்ரைஃபாலா என பல வகையான மூலிகை மற்றும் மசாலாக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். 

மேற்கூறிய அனைத்து மூலிகைகளும் நச்சுக்களை உள்ளிழுத்து வெளியேற்றி விடும். 
பல ஆயுர்வேத ச்வபன்பிரஷ் (chwapanprash) சந்தையில் கிடைக்கிறது. 
அவைகளை குளிர் காலத்தில் உண்ணுவது உடல்நலத்துக்கு இன்னமும் நல்லது. 
ஆயுர்வேத மூலிகைகள் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். 
ச்வபன்பிரஷ்ஷை சீரான முறையில் ஒரு கரண்டி அளவு உட்கொண்டால் போதும். அது சருமத்திற்கும் உடலுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 
இது போக பல பழங்களையும் உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையிலேயே நீர்ச்சத்துடன் விளங்கும் பழங்கள் உங்கள் சருமத்தை நற்பதத்துடன் பளபளப்பாக வைக்கும்.


தண்ணீர் குடியுங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~

சரும பராமரிப்புக்கான இந்த டிப்ஸ் அனைத்துக் காலங்களுக்கும் ஒத்துப்போகும். உங்கள் அணுக்களை சீர் செய்யவும் புத்துணர்வு அளிக்கவும் தண்ணீர் உதவும். சீரான முறையில் தண்ணீர் பருகினால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும். இதனை குளிர் காலத்தில் கடைப்பிடிக்கவும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. 
அனைத்து வகையான நோய்களுக்கும் தண்ணீர் மருந்தாக விளங்குகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. 
குளிர் காலத்தில் வெப்பநிலை வறண்டு போயிருப்பதால் இக்காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். 
தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீராவது குடித்தாக வேண்டும்.


குளிக்கும் பொருட்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~

குளிர்காலத்தின் போது கடுமையான சோப்புகளை பயன்படுத்த கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. 
ரசாயனம் கலந்த சோப்புகள் உங்கள் சருமத்தில் உள்ள நீரச்சத்தை நீக்கி அதனை சொரசொரப்பாக மாற்றும். 
சோப்பிற்கு பதிலாக பால், க்ரீம், மஞ்சள் பொடி மற்றும் கடலை மாவின் கலவையை பயன்படுத்துங்கள். 
இது உங்கள் சருமத்தின் அமைப்பு நயத்தை மேம்படுத்தி அதனை மென்மையாக்கும்.


ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்! 
*****************************

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் 

இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும். 


                                                         



ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் 

-------------------------------------------------------------------------------------------------------------------------


1. அஸ்வினி 

~~~~~~~~~
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய 
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய 
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய 


2. பரணி 

~~~~~~

2. கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 

சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய 

பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய 


3. கிருத்திகை 

~~~~~~~~~~

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய 

துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 

அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய 


4. ரோஹிணி 

~~~~~~~~~~

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: 
சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய


5. ம்ருகசீர்ஷம்

~~~~~~~~~~~

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 

ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 

காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய


6. திருவாதிரை

~~~~~~~~~~~

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 

ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 

ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய


7. புனர்பூசம்

~~~~~~~~~

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 

ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 

ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய


8. பூசம்

~~~~~~

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 

சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய 
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய


9. ஆயில்யம்

~~~~~~~~~~

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 

ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

~~~~~~~

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 

அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 

உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய


11. பூரம்

~~~~~~

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 

ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 

ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய


12. உத்திரம்

~~~~~~~~~

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 

ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 

தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய


13. ஹஸ்தம்

~~~~~~~~~~

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 

ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 

ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய


14. சித்திரை

~~~~~~~~~

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 

மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 

நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய


15. ஸ்வாதி

~~~~~~~~

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 

பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 

சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய


16. விசாகம்

~~~~~~~~~

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 

தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 

ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய


17. அனுஷம்

~~~~~~~~~~

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 

கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 

அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய


18. கேட்டை

~~~~~~~~~

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 

அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 

கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய


19. மூலம்

~~~~~~~~

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 

தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 

ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய


20. பூராடம்

~~~~~~~~

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 

ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 

பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய


21. உத்தராடம்

~~~~~~~~~~~

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 

சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 

குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய


22. திருவோணம்

~~~~~~~~~~~~~

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய 

சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 

கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய


23. அவிட்டம்

~~~~~~~~~~

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 

ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய 

விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய


24. சதயம்

~~~~~~~~

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 

பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய 

தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய


25. பூரட்டாதி

~~~~~~~~~

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 

சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 

யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய


26. உத்தரட்டாதி

~~~~~~~~~~~~

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 

சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 

ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய


27. ரேவதி

~~~~~~~

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய 

பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய


ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர