Monday, August 25, 2014

ஆண்களுக்கான அழகு ரகசியங்கள் 


gens_beauty_002
அழகு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான் என்பதை ஒவ்வொரு ஆண் மகன்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் உங்கள் அழகை மெருகூட்ட நீங்களும் பேஸ்பேக் போடுங்கள். 

வெள்ளரிக்காய் மாஸ்க் 
----------------------------
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.
இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும்.
வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம். 

தேன், முட்டை 
------------------
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது.
ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
தக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது.
நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.
இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும். 

வேப்பிலை மாஸ்க் 
-----------------------
வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது.
மாடித்தோட்டம் தேடி விதை
மாடித்தோட்டம் தேடி விதை
'ஆனை விலை, குதிரை விலைன்னு ஏறிக்கிட்டே இருக்கே காய்கறிகளோட விலை. ஊர் நாடா இருந்தா, நாமே தோட்டத்துல போட்டு எடுத்துடலாம். இங்க 750 சதுர அடியில குடியிருக்கிறோம். இதுல செடி, கொடிகளை எப்படி வளர்க்கிறது?'
-கிராமங்களிலிருந்தும், சிறு நகரங்களிலிருந்தும், மாநகர அவசர வாழ்க்கைக்கு மாறி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலோனோரின் விரக்திக் குரல் இது!
திண்டுக்கல் காந்திகிராமத்தில் வசிக்கும் ஆர்.எஸ்.நாராயணன் வீட்டு மொட்டைமாடியை எட்டிப் பார்த்தால் போதும்... அசந்து போவீர்கள். 
முருங்கை மரம், அவரைப் பந்தல், தக்காளிச் செடி என்று அடர்ந்த தோட்டத்தையே மொட்டை மாடியில் உருவாக்கி அசத்துகிறார் நாராயணன்.
“மத்திய அரசின் விவசாயத் துறையில் வேலை பார்த்தவன் நான். 
வேலையில் இருக்கும்போது, 'பசுமைப் புரட்சி' பற்றிய கருத்தரங்கில் கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சது. 'பழ உற்பத்தியில் உள்ள நச்சு’ என்பதுதான் தலைப்பு. அதில் பேசினவங்க, 'செயற்கை உரங்கிற பேரில் செடிகளில் 
விஷத்தை ஏத்துறாங்க'ன்னு தெளிவா எடுத்துச் சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் வந்துச்சு.
 ஓய்வுக்குப் பிறகு இயற்கை முறையில் செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். பக்கத்து வீட்டில் கொஞ்சம் இடம் காலியா இருந்தது. 
'தோட்டம் போடுறேன்'னு கேட்டப்போ, அந்த இடத்துக்காரர் மறுத்துட்டார். அதனால் என் வீட்டு மொட்டைமாடியிலேயே போடலாம்னு முடிவு பண்ணினேன். 
காலிச் சாக்குகளை தயார் பண்ணி, அதில் தோட்டத்து மண்ணை நிரப்பி தக்காளி, வெண்டை, கத்திரினு வெச்சேன். எல்லாமே நல்லா வந்துச்சு. அதுக்கப்பறம் அவரை, பூசணி, பாகற்காய், வாழை, மாதுளை, முருங்கைனு வெச்சேன். 
எல்லாமே செழிப்பாவே வளர ஆரம்பிச்சுடுச்சு.
மாடி மண்ணை மாத்த வேண்டிய அவசியமே இல்லை. 
மண்ணுக்குத் தேவையான சத்துக்களை மட்டும் கொடுத்துட்டு வந்தா போதும், நல்ல விளைச்சல் கிடைக்கும். 
மாடியில் மரங்களை வெச்சா வேர் பரவி தளத்துக்கு பாதிப்பு ஏற்படுமானு பயப்படவேண்டாம். 
நீர்க் கசிவே இருக்காது. 
அதிகமா வேர் விடுற ஆலமரத்தையும், அரச மரத்தையும் வெச்சாதான் பிரச்னை.
சென்னை மாதிரி நெருக்கடி மிகுந்த நகரங்களில் வசிக்கிறவங்களுக்கு அறுநூறு சதுர அடியில் மாடி இருந்தா போதும். 
ஒரு குடும்பத்தின் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நாமே தோட்டத்துல போட்டு எடுத்துக்கலாம். 
அதுவும் விஷமில்லாமல்!
மாடித்தோட்டம் பத்தி ஆலோசனை தேவைப் படறவங்களோட வீட்டுக்கே போய் தோட்டம் அமைச்சுத் தர நான் ரெடி. 
எனக்கான போக்குவரத்து செலவை மட்டும் அவங்க ஏத்துகிட்டாப் போதும்” என்கிறார் நாராயணன்!
நம்பிக்கை தரும் நாராயணனின் முகவரி இதோ...
---------------------------------------------------------------------------
5/574, சவுந்தரம் காலனி,
அம்பாத்துறை,
காந்திகிராமம் அஞ்சல்,
திண்டுக்கல் மாவட்டம் 

தொலைபேசி : 0451 2452365.