Saturday, April 27, 2013

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. 
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். 
இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. 
இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. 
இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. 
இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். 

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. 

எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 
2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. 

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. 
படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. 

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. 
பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. 
அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. 
இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது.

"சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.
கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. 

இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். 
அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்.
தமிழனாக இருப்பது பெருமை ஆனால் இது பல தமிழர்களுக்கு தெரியவில்லை
இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்திய நாணயத்தில் தமிழ் எழுத்துக்கள்..
தமிழர்களின் சிறந்த சங்க கால கட்டிடகலைக்காண எடுத்துகாட்டு! இடம் தஞ்சை பிரகதீஸ்வர கோவில்.
பைந்தமிழ் வளர்த்த பிராமணர்கள்.

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பொய்ப் ப்ரசாரங்களைப் பரப்பி தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றிய வரலாறுகளையே மறைத்துவிட சில புல்லுருவிகள் முயல்கின்றனர். ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!
சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

Thursday, April 25, 2013

எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் 
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை 
பொங்கு ஆடு அரவா புக்கொனிர் அவிநாசியே 
எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே

- இந்த ஸ்லோகத்தை பயணம் செய்யும் போது சொல்லி வந்தால் பயம், எந்த விதமான தொந்தரவுகளும் ஏற்படாது.