Tuesday, October 15, 2013

பத்மநாப ஏகாதசி / பரிவர்தீனி ஏகாதசி / வாமன ஜயந்தி ஏகாதசி


ஏகாதச்யாம் அஹோராத்ரம் கர்தவ்யம் போஜன த்வயம் 
மத்யாஹ்நே ஹ்யுபவா ஸச்ச ராத்ரெள ஜாகரணம் ததா

ஏகாதச்யா நிராஹார; பூத்வாஹம்து பரேஹநி
போக்ஷ்யாமி புண்டரீகாக்ஷ கதிர் பவ மமாச்யுத



புரட்டாசி மாதம் வளர்பிறைக்கு பத்மநாப ஏகாதசி எனக் கூறுவர்...

இது சிரவண நட்சத்திரம் கூடியவர்களுக்கு ஏற்றமுடையது.


எம்பெருமானுக்குப் பத்மநாபன் எனப்பெயர் ஏன் ?
இவனது நாபியில் பத்மம் தோன்றுவதால்.
அதிலிருந்து பிரம்மா அவனிடமிருந்து உலகமும் தோன்றுகிறது.

இவ்வாறு படைக்கப்பட்ட உலகம் செழிப்பாக இருக்க வேண்டுமானால் மாதம் மும்மாரி மழைப் பெய்ய வேண்டும். 
அப்பொழுது பத்மநாபனால் படைக்கப் பட்ட உலகம் செழிக்கும். 

அவன் பெயரை பெற்ற இந்த ஏகாதசியில் விரதமிருந்தால் மழை கொட்டும், வான் பொழியும், பூமி செழிக்கும்.


சூர்யவம்சத்தில் மாந்தாதா என்னும் அரசன் ஆண்டுவரும் காலத்தில் எந்தவகையான குறையும் இல்லாமல் இருந்தும் மழைக்குறைவினால் துர்பிக்ஷம் ஏற்பட்டுவிட்டது.

"நீதி தவறாது அரசு ஆண்டுவரும் எனக்கும் இந்த நிலை ஏற்பட்டதே" என்று மனவருத்தத்துடன் வனம் சென்று ஆங்கீரஸ முனிவரை வணங்கி தன் குறையை அகற்ற உபாயம் கேட்டான்.

அவரும் "உன் ராஜ்யம் தர்ம முறையில் தான் நடந்து வருகிறது. தவம் செய்ய அதிகாரமற்ற ஒருவன் தவம் புரிகிறான். அவனைக் கொன்றால் மழைப் பெய்யும்" என்றார்.

இதற்கு இவன்அவனைக் கொல்ல மனமில்லாதவனாய் வேறு உபாயம் கூற வேண்டும் என வினவினான்.

அவரும் ஆலோசித்து இந்த ஏகாதசியில் விரதமிருந்தால் போதும் என்றார்.
அவனும் இதை அநுஷ்டிக்க மழையும் பெய்தது.

இந்த ஏகாதசி விரதம் வளமான வாழ்வு தரும்.

No comments:

Post a Comment